வாணியம்பாடி ஜூலை 28: பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளை கண்டித்து வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை பதவி விலகக் கோரியும் குக்கி பழங்குடியினபெண்களை நிர்வாகப் படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தவர்களையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தமிழ்நாடுமாநில தலைவர் டி எஸ் வக்கீல் அகமது தலைமை வகித்தார். நகரமன்ற உறுப்பினர்கள் எம்.பஷீர் அகமது சி.முகமது நோ மான். ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் கட்சி நிர்வாகிகள் ஷாஜகான் நியாமத்துல்லா நவீத் மற்றும் பல கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நவீத் அஷ்வாக் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment