ஒட்டன்சத்திரம்:பாச்சலூர் அருகே மலைச்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த மண் லாரி : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வழி பாச்சலூர் செல்லும் கடைசிக்காடு செம்பரான்குளம் அருகே கிரசர் மண் ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த சாலையில் மோட்டர் சைக்கிள் மற்றும் ஜீப்புகள் மட்டுமே செல்ல முடியும். அதுபோன்ற குறுகலான சாலையில் லாரி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.மேலும் இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் வேடசந்தூர் தாலுகா செய்தியாளர் எஸ்.கார்த்திகேயன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment