ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மாவட்ட நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் மாவட்ட காவல் துறை இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சாலைப் பாதுகாப்பு கருத்தரங்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி தாராபுரம் சாலையில் முடிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக தனியார் மண்டபத்தில் மாணவர்களுக்கு போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்பு குறித்தும், சாலைப்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் கண்காணிப்பாளர் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசரூதின், காவல் துணைக் கண்காணிப்பாள் முருகேசன், வட்டாட்சியர் முத்துச்சாமி மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment