திண்டுக்கல் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவர் கைது
திண்டுக்கல் நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் படி திண்டுக்கல் நகர் டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில் திண்டுக்கல் நகர்தெற்க்கு காவல் நிலையஆய்வாளர் இளஞ்செழியன் சார்பு ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட அஸ்ஸாம் லாட்டரி டோக்கன் விற்ற திண்டுக்கல் சித்தரேவு பகுதியைச் சேர்ந்த ஹபிப் முஹம்மது மகன் சக்கரை முகமது 65 என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த1லட்சத்து10 ஆயிரம் மதிப்பில் அசாம் லாட்டரி14 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிந்து திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர்பீர் மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment