திண்டுக்கல்லில் அதிகபட்சமாக 26.2 மி.மீட்டர் மழைப்பொழிவு.
வளிமண்டல அழுத்தம் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஒரிரு இடங்களில் இன் மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்
திண்டுக்கல் மாவட்டத்தில் 10.7.2023 காலை 8 மணி முதல் 11.7.2023 காலை 8 மணி வரை மழை பொழிவின் விபரம் திண்டுக்கல்லில் 26.2 மி.மீ, கொடைக்கானல்- ரோஸ் கார்டனில் 19.5மி.மீ, பழனி 3மி.மீ, நத்தத்தில் 14 மி.மீ, நிலக்கோட்டை 2மி.மீ, வேடசந்தூர் 3.2மி.மீ, புகையிலை ஆராய்ச்சி நிலையம்-3.2மி.மீ, காமாட்சிபுரம்-1.4,
கொடைக்கானல் ப்ரையன்ட் பார்க் பகுதியில் 18.7மி.மீ, பதிவாகியுள்ளது. ஆக மொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் 91.2மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment