தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பட்டியலில் திண்டுக்கல் மாணவி மூன்றாமிடம்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் விளையாட்டுவீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலை வெளியிட்டது. 819 விளையாட்டு வீராங்கணைகள் பங்கு பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் திண்டுக்கல் மாவட்ட மாணவி விதுலா ஸ்ரீ ரோல் பால் போட்டியில் வெற்றிபெற்ற சான்றிதழ் மூலமாக மாநில அளவில் 3- ஆம் இடம் பெற்றார். மாணவிக்கு, மாஸ்டர் பிரேம்நாத், தென்னிந்திய ரோல் பால் செயலர் சுப்பிரமணியன், மாநில செயலர் கோவிந்தராஜ்,
SMBM நாடார் உறவின் முறை தாளாளர் பரமசிவம், முதல்வர் இராதாகிருஷ்ணன், துணை முதல்வர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வே.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment