தூத்துக்குடியில் இருந்து ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு வந்தடைந்த 546.25 டன் உரம் வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தனியார் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு பருவ வேளாண்மைக்கு தேவையான ரசாயனபுரங்கள் 190 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் 361 தனியார் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உர நிறுவனம் மூலம் காம்ப்ளக்ஸ் உரம் 255 டன், பொட்டாஸ் 289.25 டன், காம்ப்ளக்ஸ் உரம் 2 டன் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த 546.25 டன் உரங்கள் தூத்துக்குடியில் இருந்து ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு வந்தடைந்தன.பிறகு லாரிகள் மூலம் மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளுக்கு வேளாண்மை வட்டார உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராஜேஸ்வரி தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment