பாட்டியை கொலை செய்த வழக்கில் இன்னும் 10 நாட்களில் தீர்ப்பு வர உள்ள நிலையில் தண்டனைக்கு பயந்த நபர் விஷம் குடித்து தற்கொலை... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 1 July 2023

பாட்டியை கொலை செய்த வழக்கில் இன்னும் 10 நாட்களில் தீர்ப்பு வர உள்ள நிலையில் தண்டனைக்கு பயந்த நபர் விஷம் குடித்து தற்கொலை...

 


பாட்டியை கொலை செய்த வழக்கில் இன்னும் 10 நாட்களில் தீர்ப்பு வர உள்ள நிலையில் தண்டனைக்கு பயந்த நபர் விஷம் குடித்து தற்கொலை காலை 6 மணி அளவில்.....



திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் காளிதாஸ் வயது 40. டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் தனது பாட்டியின் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி அன்று மது போதையுடன் வீட்டிற்கு சென்ற காளிதாசை அவரது பாட்டி சுப்பம்மாள் (85) திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காளிதாஸ் தனது பாட்டியை தாக்கியுள்ளார். இதில் சுப்பம்மாள் பலத்த காயம் அடைந்து பலியானார். அதை தடுக்க போன அவரது சித்தப்பா மற்றும் சித்தப்பாவின் மகன் ஆகியோரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மகிலா கோட்டில் வழக்கு நடைபெற்று சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. இதனை அறிந்த காளிதாஸ் தனக்கு தெரிந்தவர்கள் உறவினர்கள் அனைவரிடமும் எனக்கு தண்டனை நிச்சயமாக கிடைக்கப் போகிறது அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறிவந்துள்ளார். இந்நிலையில் ஆத்துமேடு வாய்க்கால் கரையில் உள்ள வீட்டில் மதுவுடன் விஷத்தையும் கலந்து குடித்துவிட்டு படுத்து விட்டார். இன்று அதிகாலை 6:00 மணி அளவில் பார்த்த பொழுது காளிதாஸ் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவின் பேரில் வேடசந்தூர் போலீசார் காளிதாசின் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad