ஜி.டி.என் கல்லூரியில் நடைபெற்றது.
உலக யோகா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் 14-வது என்சிசி பட்டாலியன் சார்பாக திண்டுக்கல் ஜி.டி.என் கலைக்கல்லூரியில் உலக யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஜி.டி.என் கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை மாணவ மாணவியர்கள், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள், எம்.எஸ்.பி மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் ஜி.டி.என் மருத்துவக் கல்லூரி இயற்கை மற்றும் யோகா அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மருத்துவர் ஐஸ்வர்யா மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இப்பயிற்சியில் 350 மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும் நாள்தோறும் இப்பயிற்சியினை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். இதில் கல்லூரி முதல்வர் பெ.பாலகுருசாமி, கர்னல் சந்தீப் மேனன், கர்னல் விசால் கௌதம், சுபேதார் மேஜர் விஸ்வநாதா, சுபேதார் ஜி.எஸ்.ராவ், சுபேதார் சசிக்குமார் மற்றும் இராணுவ பயிற்றுநர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை லெப்டினன்ட் டாக்டர் பாண்டீஸ்வரன், முதன்மை அதிகாரிகள் டேமியன் ராபர்ட் குமார் மற்றும் பாலகுமரன் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment