திண்டுக்கல்லில் சிபிஎம் இருசக்கர வாகன பிரச்சாரம்.
திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகளிலும் நிலவும் அவலத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் கழிவு நீர் ஓடைகள் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாடு இன்மை மற்றும் திண்டுக்கல் கரூர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் தாமதப்படுத்துவது, புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திண்டுக்கல் முத்தழகுபட்டியில் காலை 9 மணி அளவில் இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் துவங்கியது. இந்த பிரச்சார இயக்கத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமை வகித்தார். பேரணியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment