நத்தம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அழகர் மலைப்பகுதியில் மரங்கள் அடர்ந்த புதர் பகுதிக்குள் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் காக்கி சட்டை அணிந்து இருந்த ஆண் சடலம் இருந்தது. இதுகுறித்து வனத்துறையினர், நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் யார்? கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment