போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்தும் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டப்பந்தயம் வருகிற 25ம் தேதி நடைபெறவுள்ளது.
போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்தும் விதமாக விழிப்புணர்வு மராத்தான் போட்டி திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் வருகின்ற 25.6.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. அதனால் போட்டியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக வரவேண்டும். போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் துவக்கி வைக்கிறார். இப்போட்டியில் வயது வரம்பின்றி ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். வெற்றி பெறும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் இரு அணிகளுக்கும் முதல் பரிசு தல ஏழாயிரம், இரண்டாம் பரிசு தல ஐந்தாயிரம், மூன்றாம் பரிசு தலா மூன்றாயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் நாலு முதல் ஏழு இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மராத்தான் போட்டியானது திண்டுக்கல் சீலப்பாடி மைதானத்தில் துவங்கி, அஞ்சலி ரவுண்டான வரை சென்று மறுபடியும் திரும்பி சீலப்பாடி மைதானத்திற்கு வந்தடையும். மொத்தம் 12 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வேண்டும். முன் பதிவிற்கு 9498185727, 7010276239 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment