பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி மேயர் இளமதி தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் மீண்டும் மஞ்ச பை விழிப்புணர்வு இயக்கம் என்கிற முன்னெடுப்பின் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தல் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் தலைமையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment