திருச்சியில் ரெயில் தண்டவாளத்தில் டயர் வைத்த சம்பவம் எதிரொலி
திண்டுக்கல் மாவட்டத்தில் நாசவேலையில் ஈடுபடும் நபர்களை பிடிக்க 12 போலீஸ் தனிப்படைகள் அமைத்து 24 மணி நேரமும் ரோந்து
திண்டுக்கல் மாவட்டத்தில் ரெயில்வே போலீசார் தண்டவாள கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 2 இன்ஸ்பெக்டர்கள், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரெயில்வே போலீசாரை கொண்ட 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
கொடைரோடு முதல் திண்டுக்கல் வரை, கொடைரோடு முதல் வாடிப்பட்டி வரை, திண்டுக்கல் முதல் பழனி வரை, பழனி முதல் பொள்ளாச்சி வரை, திண்டுக்கல் முதல் வெள்ளியணை வரை, திண்டுக்கல் முதல் அய்யலூர் வரை 6 பகுதிகளாக ரெயில் தண்டவாள பகுதி பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதிக்கும் 2 தனிப்படைகள் வீதம் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் ரோந்து பணி நடக்கிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு..
No comments:
Post a Comment