தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.
தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மாநிலத் தலைவர் பாட்ஷா சேட்,
மாநில பொதுச் செயலாளர் சுஜா முருகன், மாநில பொருளாளர் பாஸ்கர், மாநில நிறுவன தலைவர் தமிழன், மாநில அமைப்பாளர் சரவணன், மாநில நிர்வாகக்குழு தலைவர் சீனிவாசன், மாநில செய்தித்தொடர்பாளர் டேவிட் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment