திண்டுக்கல் சுற்றியுள்ள கிராமங்களில் மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடு குறித்து மத்திய இணையமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு.
திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை நேரில் ஆய்வு செய்வதற்காக சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி திண்டுக்கல் வருகை தந்தார். பின்னர் திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரெங்கநாதபுரத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்ட பணிகள் மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணிகள் மற்றும் காந்தி நகர் காலனியில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தப்படும் பிரதமந்திரியின் வீடு கட்டும் திட்டம், திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தில் மத்திய மாநில அரசுகள் சார்பில் செயல்படுத்தப்படும் அங்கன்வாடி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அண்ணா நகரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில்
மக்கும் குப்பை, மக்கா குப்பை ஆகியவற்றைப் பிரித்து உரம் தயாரிக்கும் இடத்தை பார்வையிட்டார். அப்பொழுது அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் செயல்படுத்தப்படுவதால் துர்நாற்றம் வீசுவது என்றும் இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணைஅமைச்சரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment