300 ஆண்டுகளுக்கு முன் பழமையான சௌவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 28 June 2023

300 ஆண்டுகளுக்கு முன் பழமையான சௌவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


திண்டுக்கல் அருகே தாடிக்கொம்புவில் 300 ஆண்டுகளுக்கு முன் பழமையான சௌவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு, இந்து அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் செய்வதற்கான முடிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து மூலவர் ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள், பரிவாரங்கள் ஸ்ரீசௌந்தரவல்லி தாயார், ஸ்ரீஆண்டாள், கருட ஆழ்வார், ஸ்ரீவிஷ்வக்சேனர் ஆகிய சுவாமிகளின் கோபுர விமானங்கள் மற்றும்

ராஜகோபுரம் ஆகியவை புணரமைக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டி, புதிய கோபுர கலசங்கள் அமைக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுதர்சன ஹோமம் ஆகிய பூஜைகளுடன் யாக வேள்விகள் பட்டாச்சாரியார்கள் தொடங்கி, நான்கு கால பூஜைகள் பூர்ணா குதியுடன் நிறைவு பெற்றது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்களை ஏந்தி கடம்புறப்பாடு நடைபெற்றது. சாமிகளின் கோபுர விமானங்களில் பட்டாச்சாரியார்கள் புனித நீரை கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி பல்வேறு பகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகம் முடித்து தீபாரதனைக்கு பின்னர் தண்ணீர் தெளிப்பான்கள் மூலம் புனித நீரானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad