வடமதுரை ஊராட்சி ஒன்றியம் புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 28 June 2023

வடமதுரை ஊராட்சி ஒன்றியம் புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


வடமதுரை ஊராட்சி ஒன்றியம் புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட பொது சேர்ம ஒப்படைக்கப்பட்ட வருவாய் கூறு திட்டம் (SCPAR) 2020 – 2021-ன் கீழ் ரூ.3.07 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். இந்த  

புதிய கட்டடத்தில் 763.60 சதுர அடி பரப்பளவு கொண்ட தரைதளத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அறை, பதிவறை, ஊராட்சி ஒன்றிய தலைவர் அறை, கூட்ட அரங்கம், கலையரங்கம் மற்றும் 763.60 சதுர அடி பரப்பளவு கொண்ட முதல் தளத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அறை, ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் அறை, பதிவறை, கூட்ட அரங்கம், கலையரங்கம்  ஆகியவற்றுடன், பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், வடமதுரை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி, துணைத்தலைவர் தனலட்சுமி கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவீந்திரன், ஏழுமலை, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad