இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திண்டுக்கல் மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் கலை விழா நடைபெற்றது.
இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திண்டுக்கல் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் புனித அந்தோனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து மாவட்ட அளவிலான இளையோர் கலை விழா புனித அந்தோனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் சரண் வி கோபால் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மாவட்ட அளவிலான கலை நிகழ்ச்சி போட்டிகளை துவக்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உதவி இயக்குனர் பிரபாவதி,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காமேஸ்வரி
கல்லூரி செயலாளர் அருள் தேவி,
கல்லூரி முதல்வர் மேரி பிரமிளா சாந்தி
மேலும் பல துறைகள் சார்ந்த அலுவலர்கள் இளையோர்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment