நாதஸ்வர-தவில் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 23 June 2023

நாதஸ்வர-தவில் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்


பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நாதஸ்வர-தவில் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்.


திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் நாதஸ்வரம்-தவில் கல்லூரியில் 3 ஆண்டு சான்றிதழ் படிப்பும், வேத சிவாகம பாடசாலையில் 5 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி படிப்பும் உள்ளன. இதில், சேரும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு-தங்குமிடம் மற்றும் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நாதஸ்வர-தவில் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி முடிவில் நாதஸ்வரம், தவில் இலவசமாக வழங்கப்படும்.

இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 13 வயது முதல் 16 வயதுடையவர்கள் அடுத்த மாதம் (ஜூலை) 25-ந்தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad