கொடைக்கானல், பள்ளங்கி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
கொடைக்கானல், பள்ளங்கி கோம்பை பகுதியில் கடந்த சில தினங்களாக கஞ்சா விற்பதாக கொடைக்கானல் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது இதனால் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் காவல்துறையினர். தேடுதல்வேட்டையில் கோம்பையும் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர் அப்பகுதி வாசிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த போது காவல்துறையினர் அவரை கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் இதில் வேறு ஏதேனும் நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் கொடைக்கானல் காவல்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment