திண்டுக்கல் மேற்குரத வீதியில் 3 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 550 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- கடை உரிமையாளர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரிக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மாநகர் நல அலுவலர்(பொறுப்பு) செபாஸ்டின் தலைமையில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் கொண்ட குழு திண்டுக்கல் நகர் மேற்கு ரத வீதியில்
திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 3 மொத்த வியாபார கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக், முடிச்சு பைகள், பிளாஸ்டிக் டம்ளர், தெர்மல் பிளேட் உள்ளிட்ட 550 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment