திண்டுக்கல் வழியாக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் இயக்கப்படுகிறது.
ஸ்ரீமாதா வைஷ்ணோதேவி தரிசன யாத்திரை எனும் பெயரில் பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மூலம் ஐதராபாத், ஆக்ரா, மதுரா, மாதா வைஷ்ணோ தேவி கட்ரா, அமிர்தசரஸ், புதுடெல்லி உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இருந்து இந்த ரெயில் புறப்படுகிறது. நாகர்கோவில், நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை உள்பட தமிழகத்தில் 15 ஊர்களில் நின்று செல்கிறது. எனவே அந்த ஊர்களை சேர்ந்தவர்கள் முன்பதிவு செய்து சிறப்பு ரெயிலில் சுற்றுலா செல்லலாம். இதற்காக www.irctctourism.com எனும் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment