வேடசந்தூருக்கு காதலியை தேடி வந்த மதுரை வாலிபருக்கு தர்ம அடி.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஊரை சேர்ந்த சேர்ந்த 18 வயது மாணவிக்கு, மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சேர்ந்த ஆதித்யாவுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் பேசி வந்த போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆதித்யா மாணவியை மிரட்டி என்னை காதலிக்காவிட்டால் 2 பேரும் எடுத்துக்கொாண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினர். அதிர்ச்சி அடைந்த மாணவி தனது சகோதரரிடம் கூறி உள்ளார். இதையடுத்து ஆதித்யா தனது நண்பர்களுடன் 2 பைக்கில் மாணவியின் ஊருக்கு வந்து அங்கு அவரது வீட்டை விசாரித்துக் கொண்டிருந்தபோது, மாணவியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தனர்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வாலிபர்களை மீட்டு வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment