திண்டுக்கல் அருகே கள்ளக்காதலால் தாய் - மகள் படுகொலை ஒருவர் கைது.
திண்டுக்கல் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் தாய் வள்ளியம்மாள், மகள் ராசாத்தி படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து தாடிக்கொம்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சத்தியபிரியன்(25) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கள்ளக்காதல் பிரச்சனையால் இந்த கொலை நடைபெற்றது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment