திண்டுக்கல் செட்டியபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணிடம் நகை பறித்தவர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமம், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சரண்யா 31. திண்டுக்கல்லிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். செட்டியபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சரண்யாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை அறுத்துக் கொண்டு தப்பினார். இது போல் போக்குவரத்து நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் மனைவி மஞ்சுளா 30 ,கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது 3 பவுன் செயினை மர்ம நபர் பறித்துக் கொண்டு தப்பினார். கண்காணிப்பு கேமரா பதிவு கொண்டு அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். இதனிடையே நேற்று மாலை முருகன்பட்டி அருகே செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த முகமது இப்ராஹீம் வயது 21, என்பவரை கைது செய்தனர். இரு சம்பவங்களிலும் இவர் ஈடுபட்டது விசாரணையில் உறுதியானது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment