பழனி கோவிலுக்குள் இந்துக்கள் மட்டுமே வர வேண்டும் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 24 June 2023

பழனி கோவிலுக்குள் இந்துக்கள் மட்டுமே வர வேண்டும்


பழனி கோவிலுக்குள் இந்துக்கள் மட்டுமே வர வேண்டும்- அறிவிப்பு பலகை வைத்த தேவஸ்தானம்.


திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் படிப்பாதையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், படிப்பாதையில் சூடம் ஏற்றக் கூடாது, கோவில் வளாகத்தில் டிரம்செட் அடிக்க கூடாது, கைலி அணிந்து வர கூடாது போன்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர் என்று பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad