திண்டுக்கல் அருகே மின்னல் தாக்கி பெண் பலி
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வி.எஸ். கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மார்க்கம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி அல்லிராணி வயது-35. இவர் அப்பகுதியில் புல்லுகட்டு எடுத்து வந்தார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment