தலைக்கவசம் சீட் பெல்ட் அணிந்து வந்தோர்க்கு மரக்கன்று பரிசு.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.சேரலாதன் தலைமையில் சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்துக் காவல் துறையில் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சமூக ஆர்வலர் பால்தாமஸ், முன்னாள் ராணுவ வீரர் மாறவர்மன் ஆகியோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment