கொரோனா காலத்தில் மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கியது பிஜேபி அரசு தான் திண்டுக்கல்லில் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் பேட்டி.
பிஜேபி அரசு 9 ஆண்டு கால சாதனை குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட பிஜேபி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் கூறியதாவது:- கொரோனா காலகட்டத்தில் அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்கியது. இதே போல் வருமானம் இன்றி தவிக்கும் பொது மக்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை வழங்கியது, இந்தியா முழுவதும் சாலை கட்டமைப்பு வசதி அனைத்தும் பிஜேபி அரசு தான் செய்தது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் குடிநீர் பிரச்சனையும் தீர்க்கப்படுகிறது. முத்ரா திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்கள் பலர் கடன் வாங்கி பயனடைந்துள்ளனர்.
ஜூன் 30-ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் மூலம் 67 மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது திண்டுக்கல்லில் வரும் 18ஆம் தேதி, பழனியில் ஜூன் 22ஆம் தேதி பொதுக்கூட்டம் நடக்கிறது. அப்போது பிஜேபி ஆட்சி குறித்து பொது மக்களிடம் விளக்க உள்ளோம் என்று மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் பேட்டியளித்தார். உடன் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment