திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் ரவுண்ட் ரோடு – சிலுவத்துார் சாலை சந்திப்பில் சிமெண்ட் சாலை அமைக்குப் பணிகள், இதனைத் தொடர்ந்து ரூ.1.76 கோடி மதிப்பீட்டில், ஆர்.எஸ்.ரோடு தார்ச்சாலை அமைத்தல் மற்றும் ஆர்த்தி தியேட்டர் சாலை – நாராயண அய்யர் திருமண மண்டபம் அருகே தார்ச்சாலை பணிகள் என மொத்தம் ரூ.3.52 கோடி மதிப்பிலான சாலைப்பணிகளை தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் புனித மரியன்னை துவக்கப்பள்ளியில் நடைபெற்ற துாய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கான இலவச மருத்துவ முகாமை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்து, துப்புரவு பணியாளர்களுக்கு பணி மேற்கொள்ளும்போது அணிய வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தளவாடச்சாமான்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், கலெக்டர் பூங்கொடி, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, ஆணையாளர் மகேஸ்வரி, துணை மேயர் ராஜப்பா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment