திண்டுக்கல்லில் காவல்துறை - பொதுமக்கள் இடையே நல்லறவு வளர்க்கும் விதமாக மாரத்தான் போட்டி நடைபெற்றது.
திண்டுக்கல்லில் காவல்துறை சார்பில் பொதுமக்களிடையே நல்லுணர்வு ஏற்படும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என 321 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டி சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கி கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக அஞ்சலி ரவுண்டானா சென்று மீண்டும் ஆயுதப்படை மைதானம் வரை 12 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.7 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ 5 ஆயிரம், மூன்றாம் பரிசு 3 ஆயிரம் ரூபாய் மற்றும் நான்கு முதல் பத்தாம் பரிசு வரை வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பரிசுகளை வழங்கினார்.இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, ஆசிரியர் துரைசாமி மற்றும் அனைத்து பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்கள் காவல்துறையினர் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் நான்காம் வகுப்பு மாணவி முதல் பரிசினை தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் 10 பரிசினையும் 12 வயதிற்கு உட்பட்ட சிறுமியர்களே தட்டிச் சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment