போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்கள் தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு நடந்தது. இதில் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, ஓவியப்பட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டிஎஸ்பி பெனசீர் பாத்திமா கலந்து கொண்டு பேசுகையில்:- பள்ளிப் பருவத்தில் தேவையில்லாத சமூக வலைதளங்கள் மற்றும் போதை பழக்கங்களுக்கு ஆளாகக் கூடாது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பது குறித்தும், பள்ளியில் மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவது குறித்த தகவலை ஆசிரியர்களிடமோ அல்லது போலீசாரிடமோ தெரிவிக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment