கொடைக்கானலில் பெருமாள் மலை அருகே வனப்பகுதியில் கொட்டப்படும் கழிவுகளால் வனவிலங்குகள் பலியாகும் அபாய நிலை உருவாகியுள்ளது.
கொடைக்கானல் அடுக்கம் கிராம பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்தது பெருமாள் மலை. இதற்கு அடுத்ததாக சில கிராமங்கள் உள்ளன. இவற்றில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் அனைத்தும் வனப்பகுதியை அடுத்துள்ள பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது. வனப்பகுதிக்கு அருகே இந்த குப்பைகள் கொட்டப்படுவதால் வன விலங்குகள் அவற்றில் கிடக்கும் உணவு பொருட்களை உண்ணும் நிலை ஏற்படுகிறது. இந்த குப்பை கழிவுகளில் அதிக அளவில் பாலித்தீன் பைகள் உள்ளிட்டவை காணப்படுகின்றன. இவற்றை உணவு பொருட்களுடன் சேர்த்து வனவிலங்குகள் உண்கின்றன. இதனால் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment