திண்டுக்கல் செம்பட்டி ஒயின்ஷாப்பில் பீர் பாட்டிலால் வாலிபர் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடிய நபர்கள்
திண்டுக்கல் செம்பட்டி அம்பாத்துறை அருகே புதுகோடாங்கி பட்டியில் இயங்கி வரும் ஒயின் ஷாப் ஒன்றில் நான்கு நபர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர் இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி மூன்று நபர்கள் சேர்ந்து ஒரு நபரை பீர் பாட்டிலால் வயிற்றில் குத்தியுள்ளார் மேலும் அவரது தலையில் தாக்கியதால் பலத்த காயம் ஏற்பட்டது காயமடைந்த நபர் திண்டுக்கல் ஓய் எம் ஆர் பகுதியை சேர்ந்த குமரவேல் 40 என்பதும் இவரை தாக்கியவர்கள் செம்பட்டியைச் சேர்ந்த ஹரிஹரன் திருப்பூரை சேர்ந்த சதீஷ் விஜயகுமார் என்பது தெரிய வந்தது படுகாயம் அடைந்த குமரவேலை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேற்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment