திண்டுக்கல் நகர மதிமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
திண்டுக்கல் நகர மதிமுக சார்பில் கழகத்தின் 30ஆம் ஆண்டு துவக்க குடியேற்று விழா,
4வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகனுக்கு பாராட்டு விழா, 5-வது கழக அமைப்பு தேர்தலில் திண்டுக்கல் நகர கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக விழா ஆகிய முப்பெரும் விழா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் செல்வேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ரியல் ஆறுமுகம் வரவேற்றார். திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் எம்.வி.எம் கல்லூரி, ரவுண்ட் ரோடு, வேடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது. இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி, மாணவரணி
நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment