திண்டுக்கல் மாநகராட்சி நிரந்தரம் மற்றும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் குறைகேட்டுகும் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சி காங்கிரஸ் தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பில்,
மாநகராட்சி நிரந்தர மற்றும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொழிற்சங்க பொதுச்செயலாளர் காளிராஜ் தலைமை தாங்கினார். தலைவர் பக்ருதீன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக
மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மாமன்ற உறுப்பினர் பாரதி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக தனியார் ஒப்பந்த முறையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை தொகுப்பூதிய பணியாளராக பணியமர்த்த வேண்டும். 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் சுயஉதவிகுழுக்கள் மூலம் தூய்மை பணியாளர்களை பணியமர்த்திட வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் திண்டுக்கல் மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment