மாணவ, மாணவியர்களுக்கு உரிய நேரத்தில் பாடப் புத்தகங்கள். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 4 June 2023

மாணவ, மாணவியர்களுக்கு உரிய நேரத்தில் பாடப் புத்தகங்கள்.


திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 3½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக, பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் இறுதிகட்ட பணி தீவிரம் அடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,983 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் 3 லட்சத்து 45 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்தனர். 


எனவே, இந்த கல்வி ஆண்டுக்கு 3½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் ஏற்கனவே வந்துவிட்டன. இறுதிகட்டமாக பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்தது. அதன்படி, மாவட்ட கல்வி அலுவலக கிடங்குகளில் இருந்து வாகனங்களில் பாடப்புத்தகங்களை ஏற்றி பள்ளிகளுக்கு அனுப்பினர். பள்ளிகள் திறக்கப்பட்டதும், மாணவ, மாணவியர்களுக்கு பாடப் புத்தகம், நோட்டுகளை, கல்வி நிர்வாகம் உரிய நேரத்தில் வழங்கும். 

No comments:

Post a Comment

Post Top Ad