திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி அருகே பைக் திருடிய நபர் கைது
திண்டுக்கல் மாவட்டம் ஆவணி பட்டியைச் சேர்ந்த நபர் மூக்கன் வயது 40 இவர் திண்டுக்கல் பாறைப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் ஒரு கடையில் குளிர்பானம் வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தை ரோட்டோரம் நிறுத்திவிட்டு சென்றார் குளிர்பானம் வாங்கிவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது தனது இருசக்கர வாகனத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் மேலும் இது சம்பந்தமாக சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் சாணார்பட்டி காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் சிராஜுதீன் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர் பைக் காணாமல் போன பகுதியில் கடை ஒன்றில் சிசிடி கேமராவை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் பைக்கை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது விசாரணையில் பைக்கை திருடி நபர் அஞ்சுகூறியன்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்த காட்டு ராஜா வயது 25 என்பது தெரியவந்தது மேலும் சாணார்பட்டி காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment