மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் திமுக தலைவரும், முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு அவரது உருவப் படத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி. செந்தில்குமார் எம்எல்ஏ மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, திண்டுக்கல் பகுதி செயலாளர்கள் ராஜேந்திரகுமார், பஜூலுல்ஹக், ஜானகிராமன், சந்திரசேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment