திண்டுக்கல் அருகே ஒருவருக்கு விஷம் தடவிய அரிவாளால் வெட்டு- எஸ்பியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
திண்டுக்கல் அருகே வெள்ளோடு பிரிவு எதிரே ஜே.டி போர்வெல் வைத்திருப்பவர் திமுகவைச் சேர்ந்த சமாதான பிரபு. இவருக்கும் சாம்சன் என்பவருக்கும் தொழில் போட்டி கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே-29 ஆம் தேதி இரவு சமாதான பிரபு டூவீலரில் வெள்ளோடு பிரிவு அருகே வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து வந்த சாம்சன் தான் மறைத்து வைத்திருந்த விஷம் தடவிய அருவாளால் வெட்டியுள்ளார். கையில் பலத்த காயமடைந்த சமாதான பிரபு கூச்சலிட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சமாதான பிரபுவை வெட்டுக்காயத்தை பரிசோதிக்காமல் சிறிய காயம் தான் என்று கூறி மருத்துவர்கள் கட்டுப்போட்டுள்ள நிலையில், இரண்டு நாட்களில் கை முழுவதுமாக வீங்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியமாக இருப்பது பிடிக்காமல் உடனே சமாதான பிரபுவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சமாதான பிரபுவிற்கு விஷம் தடவிய அறிவாளால் வெட்டப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர். இவரது குடும்பத்தினர் இதுகுறித்து
திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 30ஆம் தேதி புகார் மனு அளித்துள்ளனர். புகாரில், தங்களது குடும்பத்திற்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 5 நாட்களாகியும் குற்றவாளியை கைது செய்யாமல், காவல்துறை வேடிக்கை பார்த்து வருவதாகவும் தனக்கும், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமாதான பிரபு வேதனை தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment