பண்ணைக்காடு அருகே மலைப்பாதையில் கரடி உலா வந்தது. இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
திண்டுக்கல்லில் இருந்து தாண்டிக்குடி நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் பண்ணைக்காடு மலைப்பாதையில் உள்ள எதிரொலிக்கும்பாறை பகுதியில் சென்ற போது பஸ்சுக்கு முன்னால் சாலையில் கரடி ஒன்று சாவகாசமாக நடந்து சென்று கொண்டிருந்தது. கரடிக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்க டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கினார். அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் சிலர், மலைப்பாதையில் நடந்து சென்ற கரடியை தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment