சுத்தியலால் அடித்து தந்தையின் மண்டையை உடைத்த மில்தொழிலாளி - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 19 June 2023

சுத்தியலால் அடித்து தந்தையின் மண்டையை உடைத்த மில்தொழிலாளி


வடமதுரை மகளிர் போலீஸ் நிலையம் முன்பு, சுத்தியலால் அடித்து தந்தையின் மண்டையை மில்தொழிலாளி உடைத்தார்.


திண்டுக்கல் வடமதுரையை அடுத்த சிங்காரக்கோட்டை அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் பெருமாள் (65) இவருடைய மகன் சரவணன் (36) இவர்களுடைய குடும்ப பிரச்சனை காரணமாக பெருமாளும், சரவணன் மனைவி பிரியாவும் சரவணன் மீது புகார் கொடுக்க வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன் சுத்தியலுடன் அங்கு வந்தார். போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த பெருமாளின் தலையில் அவர் சுத்தியால் அடித்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதில் பெருமாளின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனைக்கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெருமாளை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார்.      


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad