திண்டுக்கல் அருகே மனைவியின் சேலையில் தூக்கு போட்டு போலிஸ் ஏட்டு தற்கொலை
திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் ராமசாமி காலனியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (51). இவர் குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment