ராகுல் காந்தி பிறந்த நாள் விழா திண்டுக்கல்லில் காங்கிரசார் சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் காங்கிரசார் சார்பில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு பகுதியில் கிழக்கு பகுதி செயலாளர் உதயகுமார் தலைமையிலும் , நாகல்நகர் பகுதியில் தெற்கு பகுதி செயலாளர் நாகலட்சுமி தலைமையிலும், பேகம்பூர் பகுதியில் மேற்கு பகுதி செயலாளர் அப்பாஸ் மந்திரி தலைமையிலும், காட்டாஸ்பத்திரி பகுதியில் வடக்கு பகுதி செயலாளர் பரமன் தலைமையிலும், அதே பகுதியில் மனித உரிமைத் துறை சார்பில் மாநில செயலாளர் குமார் தலைமையிலும், காமராஜர் சிலை வளாகத்தில் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையிலும், மாநகராட்சி அலுவலகம் அருகில் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் காளிராஜ் தலைமையிலும் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் அனைத்து பகுதிகளிலும் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன் கட்சி கொடி ஏற்றினார். மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜி, மச்சக்காளை, அம்சவல்லி, மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் வேங்கை ராஜா, சிறுபான்மை பிரிவு தலைவர் காஜா மைதீன், கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் சுமதி, மாநகர மாவட்ட தலைவர் ரோஜா பேகம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார், மாமன்ற உறுப்பினர் பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். செல்லும் இடங்களிலெல்லாம் அப்பகுதியில் உள்ள காங்கிரசார் வெடி வெடித்து ராகுல் காந்தி பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment