முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 08.02.2023 முதல் 20.02.2023 வரை நடைபெற்றன. இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக இணையதளம் வாயிலாக மொத்தம் 15,331 வீரர், வீராங்கனைகள் பெயர் பதிவு செய்திருந்தனர். அதில் 10,531 வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிச வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு
முதல் பரிசு ரூ.3,000, 2-ஆம் பரிசு ரூ.2,000 மற்றும் 3–ஆம் பரிசு ரூ.1,000 வீதம் மொத்தம் 1,737 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.41.58 இலட்சம் மதிப்பிலான பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பளார் பாஸ்கரன், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் எஸ்.ராஜப்பா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன், திண்டுக்கல் மாவட்ட அனைத்து விளையாட்டுக்கழகம் நிர்வாகி சண்முகம் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment