திண்டுக்கல்லில் நடைபெற்ற முகாமில் இரத்தக்கசிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது.
மதுரை இண்டாஸ் அறக்கட்டளை இந்தியா முழுவதும் சுமார் 30 திட்ட அலுவலகம் அமைக்கப்பட்டு இதன் மூலம் 22 மாநிலங்களில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக தங்குமிடம், ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் ஆற்றுப்படுத்துதல் சேவைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் இரத்தக்கசிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இம்முகாமில் இண்டாஸ் அறக்கட்டளை திட்ட மேலாளர் நல்லையன் பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment