சுதந்திர போராட்ட தியாகி கக்கனின் பிறந்தநாளை திண்டுக்கல்லில் காங்கிரசார் கொண்டாடினர்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகி கக்கனின் 115-வது பிறந்த நாள் விழா வர்த்தகப் பிரிவு மாநகர மாவட்ட தலைவர் ஆசிக் அலி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், தியாகி ராமு ராமசாமி,
மூத்த நிர்வாகி அப்துல் ஜபார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜி, மச்சக்காளை, மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், பொதுச் செயலாளர் வேங்கை ராஜா, சிறுபான்மை பிரிவு தலைவர் காஜா மைதீன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கக்கனின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment