திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் தனியார் ஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜி, மச்சக்காளை, அம்சவல்லி, குப்புசாமி, மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் வருகின்ற 2024ல் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்கிற உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் முன்னாள் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் முகமது சித்திக், மாமன்ற உறுப்பினர் பாரதி, மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் வேங்கை ராஜா, மண்டல தலைவர் மதுரைவீரன், திண்டுக்கல் கிழக்கு பகுதி செயலாளர் உதயகுமார், தெற்கு பகுதி செயலாளர் நாகலட்சுமி, மேற்கு பகுதி செயலாளர் அப்பாஸ் மந்திரி, வடக்கு பகுதி செயலாளர் பரமன், மகிளா காங்கிரஸ் தலைவர் ரோஜா பேகம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார்,மாணவர் காங்கிரஸ் தலைவர் அமீர் அம்ஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment