போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 26 June 2023

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு.


போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு.


திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று (26.06.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் "போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி" ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.


*"போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி"*


போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

போதைப் பொருள்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி ஏற்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad